Categories
மாநில செய்திகள்

70ஆவது பிறந்த நாள்….. கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்த கேப்டன் விஜயகாந்த்….!!

தனது பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்தித்தார்.

தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

இந்த பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமைகழக அலுவலகத்தில்  விஜயகாந்த் தொண்டர்களை நேரில் சந்தித்து கையசைத்து கையசைத்தார்.. 2005 ஆம் ஆண்டு  தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டு விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வளர்ச்சி பெற்றார்.. இதையடுத்து காலப்போக்கில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.. தொண்டர்களையும் சந்திக்கமுடியமால் இருந்தது..

இந்நிலையில் தற்போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் தலைமை அலுவலகத்திற்கு காலை முதலே வருகை தந்தனர், தொண்டர்களின் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் இன்று வழங்க உள்ளார் கேப்டன் விஜயகாந்த். மேலும் கேக் வெட்டும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிகவின் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகர், சுதீப் உள்ளிட்டோர் தேமுதிகவின் உயர்மட்டலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் 1500 பேருக்கு அன்னதானம் வழங்க உள்ளதாகவும், 25 கிலோ கேசரி இங்குள்ள வந்துள்ள தொண்டர்கள் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று தேமுதிகவின் சார்பாக வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |