Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஓபிஎஸ் உடன் இனி சேர முடியாது: கோர்ட்டில் ஈபிஎஸ் முக்கிய வாதம்…!!

ஓபிஎஸ் உடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு தங்களின் வாதங்களை முன் வைத்து இருக்கிறது.

ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கும் போது ஈபிஎஸ் தரப்பில்,  குறிப்பாக ஓபிஎஸ் உடன் சேர்ந்து இனி செயல்பட முடியாது என்று வாதங்களை முன் வைத்திருக்கிறார். ஓபிஎஸ் உடன்  இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. அதிமுகவின் கட்சி நடவடிக்கைகள் இதனால் முடங்கிவிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில்ஈபிஎஸ் தரப்பில் வாதத்தை முன் வைத்திருக்கிறார்.

Categories

Tech |