அமெரிக்காவில் நாய்கள் கூட்டமாக தாக்கியதில் தபால் ஊழியர் உயிரிழந்தார்.
புளோரிடாவின் கிராமப்புறத்தில் ஐந்து நாய்கள் தாக்கியதில் அமெரிக்க தபால் ஊழியர் கொல்லப்பட்டார். மெல்ரோஸின் பமீலா ஜேன் ராக் (61) என்ற பெண் கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இன்டர்லாச்சென் லேக் எஸ்டேட் பகுதியில் நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவர் இறந்தார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நாய்களின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். நாய்களை துரத்த முயன்ற பமீலா உதவிக்காக கத்திக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை கொண்டு வந்து நாய்களை விரட்டுவதற்காக வானிலும் தரையிலும் பல முறை சுட்டார்.
ஜூன் மாதம் அமெரிக்க தபால் சேவை வெளியிட்ட தரவுகளின்படி, 2021ல் மட்டும் அமெரிக்காவில் 5,400க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் நாய்களால் தாக்கப்பட்டனர். புளோரிடாவில் கடந்த ஆண்டு 201 சம்பவங்கள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது.