Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்…. முதல்வரின் பிளான்கள் என்னென்ன….? இதோ முழு விவரம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு 2 நாள் பயணமாக ஈரோட்டிற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் முதல்வருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் மதிய உணவு அருந்திவிட்டு கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞரின் 8 அடி‌ உயர வெண்கல சிலையையும், கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு முதல்வர் காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுப்பார். அதன் பிறகு மறுநாள் காலை பெருந்துறை, கிரே நகர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்ய இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு 65,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதன் பிறகு சோலார் பகுதியில் வரவிருக்கும் புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி விட்டு, முடிவடைந்த பல்வேறு பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு செல்கிறார். மேலும் முதல்வர் வருகையை ஒட்டி ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு தொண்டர்கள் பல இடங்களில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |