பாதுகாப்பான அணு உலைகளை பரிசீலனை செய்ய ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானின் மின்சார உற்பத்திக்காக நவீன பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற பசுமை மாற்ற கருத்தரங்கில் அவர் கூறியதாவது,
“பருவநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை மின்சார உற்பத்தியில் தவிர்ப்பதற்காக நாட்டில் அதிநவீனமான அளவில் சிறிய பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அணு உலை விபத்துக்கு பிறகு அந்நாட்டின் அணுமின் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.