செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சிக்கு என்ன செய்தார் ? ஒன்பது தேர்தலை சந்திக்கிறோம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி. எல்லா இடங்களிலும் தோல்வி. அண்ணா திமுகவை பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இவர்கள் பின்னால் யாரும் இல்லாத காரணத்தினால், இவர்கள் இனிமேல் நீதிமன்றத்தில் இன்னும் வருகின்ற தீர்ப்பில் கட்சி அண்ணன் ஓபிஎஸ் இடத்திலேயே சென்று விடும் என்ற பயத்தில், இவர்கள் இன்றைக்கு இவ்வளவு மோசமாக, கீழ்த்தரமாக பேசுவதும் செயல்படுவதுமாக இருக்கிறார்கள். இதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், இவர்கள் நான்கு அரையாண்டு காலத்தில் செய்த தவறுகளை பட்டியல் போட்டு தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கையிலும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்படிப்பட்டஅடியாட்களை வைத்துக்கொண்டு பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
தவறுகள் செய்தவர்கள்.. என்னென்ன செய்தார்கள் ? என்பதை எங்கே சொல்ல வேண்டுமோ அங்கே சொல்லி இருக்கிறோம், கொடுத்து இருக்கிறோம். நாங்கள் சொன்ன பிறகும் இரண்டு மூன்று பேர் உடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்திருக்கிறது. இன்னும் வரும், இன்னும் நடக்கும். தவறு செய்தவர் தண்டிக்கப்படுவார்கள், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,
மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றத்தில் விசாரணை இருக்கின்றபோது நீதிமன்றத்தின் உடைய நடைமுறைகளை விமர்சனமாகவோ, பேசக்கூடாது என்பது விதிமுறை, அந்த அடிப்படையில் உங்களுக்கு தெரியும் விரைவில் இரண்டு மூன்று நாட்களில் பதில் வந்துவிடும் என தெரிவித்தார்.