தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக இந்த திட்டம் மாநகராட்சி,நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும். தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவிற்கு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் படி உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.பள்ளி ஆசிரியர்களும் மேலாண்மை குழு உறுப்பினர்களும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து தரத்தை அறிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.