ரஷ்யா உலகம் முழுதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்திருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு கவுன்சலில் ஆற்றிய உரையின்போது உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனின் சுகந்திரதினமான நேற்று நாட்டின் அதிபர் அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோ உரையில், ரஷ்யா முழு உலகையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்திருக்கிறது என எச்சரித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய ராணுவம் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் பிரதேசத்தை போர் மண்டலமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை என ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யாவின் ஆயுத ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக கண்டம் கதிர்வீச்சு மாசுபாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என கூறினார். மேலும் IAEA முக்கியபணி ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலைமையை விரைவில் நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே சமயத்தில் மாஸ்கோ நிபந்தனை இன்றி அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தி விட்டு நிலையத்தில் இருந்து முற்றிலும் வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.