Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |