கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தில் செந்தில்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்திக்
என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிருத்திக் வடுவூர் தென்பாதி பகுதியில் அமைந்துள்ள தனது சித்தப்பா கோகுல் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோகுல் மோட்டார் சைக்கிளில் ஹிருத்திக்கை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைத்திடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஹிருத்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோகுலை கைது செய்தனர். இந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமீர்தீன் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான அவருடைய சித்தப்பா கோகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.