Categories
உலக செய்திகள்

சுரங்கப்பாதைக்குள் மாட்டிக் கொண்ட ரயில் பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

பிரான்சையும், பிரித்தானியாவையும் இணைக்கும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் போகும் ரயில் பாதையில் நேற்று முன்தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பலமணி நேரம் மக்கள் ரயிலுக்குள் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதையடுத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து ரயிலில் இருந்து பயணிகள் அருகிலுள்ள சர்வீஸ் சுரங்கப்பாதைக்குள் நுழைந்துள்ளார்கள்.

கடலுக்கு அடியில் அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்குள் சுமார் 5 மணி நேரம் செலவிடவேண்டி இருந்ததால் சில பயணிகள் அச்சமடைந்துள்ளார்கள். மேலும் சில பெண்கள் பயத்தில் அழத்தொடங்கியுள்ளனர். அது ஒரு பயங்கர அனுபவமாக இருந்தது என Sarah Fellows(37) என்ற பெண் கூறியுள்ளார்.  நேற்று காலை 6.00 மணியளவில் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருந்த அனைவரும் பாதுகாப்புடன் மறுபக்கம் கொண்டு சேர்க்கப்பட்டனர். மேலும் ரயில்சேவை பழைய நிலைக்குத் திரும்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |