பென்சில் படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பென்சில்.. இந்த படத்தை இயக்கியிருந்தவர் மணி நாகராஜ். இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்குப் பின்னர் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்கி வந்தார்.
இந்த படத்தின் நீயா நானா கோபிநாத், விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் உட்பட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இயக்குனர்மணி நாகராஜ் இளம் வயதிலேயே மரணம் அடைந்துள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#ManiNagaraj | ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் காலமானார். #Pencil pic.twitter.com/Kmsx8cLN9Z
— Senthilraja R (@SenthilraajaR) August 25, 2022