கடந்த 11ஆம் தேதி அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டமானது சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அங்கு செல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் வந்தார்.
அப்போது அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். சாலையின் இருபுறத்திலும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகதிற்குள் நுழைந்தார். அப்போது அதிமுக அலுவலக வாயில் உடைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மக்களவை உறுப்பினரும் ராயப்பேட்டை போலீஸ்சில் புகார் அளித்தார்.
அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டது என பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான, வைத்தியலிங்கம், ஜேடிசி பிரபாகரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, ராமச்சந்திரன், எம்.எம் பாபு, உசிலம்பட்டியை சேர்ந்த கீதா உள்ளிட்ட 300பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.