Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பாரதிபுரம் பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசி(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் எழிலரசி அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த எழிலரசின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் எழிலரசி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் போலீசார் இரண்டு பேரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எழிலரசியின் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால் சுரேஷுடன் எழிலரசியை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |