நாடுமுழுவதும் நடைபெறும் விவாதமாக அரசின் இலவசம் இருக்கின்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய சூழலில்பாரதிய ஜனதா கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அதுவும் சில இடத்தில் பார்த்தீர்கள் என்றால், தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடக்கிறது, அந்த இடைத்தேர்தலில் இலவசத்தை மையமாக வைத்து தான் பேசுகிறார்கள்.
மக்களுக்கு அடிப்படை உரிமையாக வருவதை, எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி தடுக்காது, இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும். உதாரணமாக விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம், பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக்கம் இலவச மின்சாரம் மட்டும் அல்ல, இலவச மும்முனை கரண்ட் 24 மணி நேரம் விவசாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் மின்வாரிய துறை போடுகின்ற டிராமா மாதிரி கிடையாது.. அதாவது நாங்கள் வந்தால் நெசவுத்தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் கரண்ட் இலவசம் என்று 750 யூனிடத்திலிருந்து ஆயிரம் யூனிட் இலவசம் என்று சொல்லிவிட்டு, இலவசமும் கொடுக்கவில்லை, ஆனால் இன்றைக்கு அவர்களுடைய மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியை பற்றி,
பாரதிய ஜனதா கட்சியினுடைய விவசாய சட்டத்தை பற்றி, சட்டங்களை பற்றி குறிப்பாக நம்முடைய மின்சார சட்டத்தைப்பற்றி பேசுவதற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. கொடுக்கின்றோம் என்று சொல்லிவிட்டு குறிப்பாக இவர்களுக்கு தொந்தரவை மட்டும்தான் திமுக அரசு கொடுத்திருக்கிறதே தவிர, சொன்ன விஷயங்களை செய்ததாக சரித்திரம் இல்லை என விமர்சித்தார்.