Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஆர்டர் செய்தால் போதும்…. உங்க இருக்கைக்கே இது வரும்….. ரயில்வே அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ரயில்களில் தொலைதூர பயணம் செய்யும் போது இனி வாட்ஸ்ஆப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உணவு விநியோக சேவையான Zoop, ரயில்களில் எளிதான மற்றும் வசதியான உணவு விநியோக சேவைகளை வழங்குவதற்காக Jio Hapik உடன் கூட்டு சேர்ந்துள்ளது. யனர்கள் இப்போது வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்தி தங்கள் ரயிலில் உணவை ஆர்டர் செய்யலாம், இது பயணிகள் தங்கள் பயணத்தின் போது அவர்களின் PNR எண்ணைப் பயன்படுத்தி தங்கள் இருக்கைகளுக்கு நேரடியாக உணவைப் பெற வழிவகை செய்கிறது. ஜூப் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமலேயே பயணிகளின் பயணத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் எந்த நிலையத்திலும் தங்கள் உணவை டெலிவரி செய்ய இந்த சேவை உதவுகிறது.

சாட்போட்டைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் உணவு விநியோகம் குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளையும் பார்க்கலாம். மேலும், பயனர்கள் கருத்துக்களை வழங்கவும், அவர்களின் ஆர்டருக்குத் தேவையான தகவல்களை பெறவும் முடியும்.

Categories

Tech |