பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 91 வருடங்களாக தினந்தோறும் சாண்ட்விச் உண்பதாக அரண்மையில் பணியாற்றும் ராயல் செஃப் கூறியிருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதை கடந்திருக்கிறார். இந்நிலையில் அவரின் அரண்மனையில் 15 வருடங்களாக பணிபுரிந்த ராயல் செஃப் McGrady தெரிவித்ததாவது, மகாராணி மிகவும் விரும்பி உண்ணும் உணவு ஜாம் பென்னிஸ் என்ற ஜாம் சாண்ட்விச் தான்.
அதில் பயன்படுத்தும் ஜாம், அரண்மனையில் உள்ள தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஸ்காட்டிஷ் ஸ்ட்ராபெர்ரியிருந்து தயாரிக்கப்படும். இதனை மகாராணி சுமார் 91 வருடங்களாக, தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், மதிய உணவில் பணியார வகை உணவை விரும்பி உண்பார் என்று தெரிவித்திருக்கிறார்.