Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் “ட்ரிக்கர்”…. வெளியானது முதல் பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…. இணையத்தில் வைரல்….!!!!

ட்ரிக்கர் படத்தின் முதல் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதர்வா. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். இந்நிலையில் நடிகர் அதர்வா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிக்கர் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயின் ஆக நடிக்க, சின்னி ஜெயந்த், முனீஸ் காந்த், அருண்பாண்டியன் மற்றும் சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் பர்ஸ்ட் சிங்கிளை  தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்த அதர்வா, யார் வந்து சுட்டாலும் சீரும் தோட்டா என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |