மீனம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களால் மன அமைதி புரியும் நாளாகவே இருக்கும். எதிலும் தீர்க்கமாக முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும். வீட்டு விவகாரங்கள் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. ரகசியங்களை கூடுமாணவர்களை இன்று பாதுகாக்க வேண்டும்.
உங்களுடைய அறிவு திறமை இன்று ஓரளவு கூடும். இனிமையான பேச்சின் மூலம் ஓரளவு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம், இன்றைய நாளை நீங்கள் இவ்வாறு கடக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும், பிரச்சனை இல்லை. ஆனால் உத்தியோகத்தில் உழைப்பு கொஞ்சம் கூடும், பார்த்துக்கொள்ளுங்கள்.
எடுக்கக் கூடிய பொருள்களை நீங்கள் கையாளும்பொழுது ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக இருங்கள். கொடுக்கல், வாங்கலிலும் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் இன்று கொடுக்க வேண்டாம். மாணவச் செல்வங்கள் கூடுமானவரை விளையாட்டை எரங்கட்டி விட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லதாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,பிங்க் நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட திசை-: தெற்கு