Categories
சினிமா தமிழ் சினிமா

“கமல் சார் எனக்கு பிடித்த நாயகன்”… நாகர்ஜுனா நெகிழ்ச்சி பேச்சு…!!!!!!

ஏ தில் கே முஸ்கில் படத்தை தொடர்ந்து ஆலியாபாட்,ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியிருக்கின்ற இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜுனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்து இருக்கின்றார். ஹிந்தி தமிழ் என பழமொழிகளில் வெளியாக இருக்கின்ற இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் பிரமோஷனுக்காக பட குழுவின சென்னை வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா சென்னைக்கு வருவது சொந்த வீட்டிற்கு வருவது போல் இருக்கின்றது. எனது பயணம் இங்குதான் தொடங்கியது. விக்ரம் திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து இருக்கின்றது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |