தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மழை பெய்யும்.எனவே இடி மின்னலின் போது டிவி மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் மின்கம்பத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம் எனவும் அருந்து கிடக்கும் மின்சார தம்பிய அருகே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.