செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழில் முனைவோர்கள் மற்றும் அதனுடைய நிர்வாக பெருமக்கள் மின்சார கட்டண உயர்வில், சில இடங்களில் குறிப்பாக பார்த்தால் டிமான்ட் சார்ஜ், பிக்சட் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார்கள். இந்த எல்.டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு, அதுபோல ஹெச்டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட,
உயர்த்துவதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற பிக்சட் சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இதில் இரண்டிலும் அவர்களுக்கான உயர்வு அதிகமாக இருக்கிறது என்று அவர்களுடைய கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இது குறித்து மின்சார வாரியம் மாண்புமிகு முதலமைச்சர் உடைய உத்தரவின் அடிப்படையில் கண்டிப்பாக தமிழக அரசு பரிசீலிக்கும். வரக்கூடிய இரண்டு நாட்களில் அதற்காக நிர்ணயம் செய்யக்கூடிய கட்டணம் இறுதி செய்து, ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும்.
நோட்டாவுடன் போட்டி போடுகிறவர்களை எங்களுடன் சேர்த்து பேசுகிறீர்களே உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா? இல்லாத ஒருவர் ( பாஜக கட்சி ) இருப்பது போல் காட்டுவது பத்திரிக்கையாளர்கள், சமூக வலைதளத்தில் தான். நோட்டாவுடன் போட்டி போட்டவர்களை எங்களுடன் ஒப்பிட்டு பார்த்து கேள்வி கேட்பதே நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நான் தெரியாமல் கேட்கிறேன், நீங்களும் கோயம்புத்தூரில் இருக்கிறேன், நானும் கோயம்புத்தூரில் இருக்கிறேன். மாநகராட்சியில் எத்தனை வார்டுஜெயித்து விட்டார்கள் ? பிறகு எப்படி எங்களுடன் அவர்களை ஒப்பிடுகிறீர்கள். 100 வார்டுகளில் 96 வார்டுகளில் நாங்கள் ஜெயித்திருக்கிறோம். எங்களுடைய கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மகத்தான வெற்றியை கொடுத்திருக்கிறார். ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாதவர்களை எங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பேசுவது நியாயமா ? என தெரிவித்தார்.