துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமிர்த சரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி ஜோதி ஆதித்யா சிந்தியாவிற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருக்கின்றனர். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, துபாயிலிருந்து தற்போது இந்தியாவிற்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகின்றது.
2014 ஆம் வருடம் ஒப்பந்தத்தின்படி தற்போது 65 ஆயிரத்து 200 விமான இருக்கைகள் இருக்கின்றது. கடந்த ஏழு வருடங்களாக இந்தியா துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. மேலும் விமான போக்குவரத்து மூலமாக இரண்டு நாடுகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக இருக்கின்றது வாரம் தோறும் 50,000 விமான இருக்கைகளை அதிகரிக்கவும் இருக்கின்றோம். இந்த நிலையில் விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும் இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அதில் கூறியுள்ளார்.