ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா என்ற நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் ஒரு ரூபாய்க்கு அளிக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெங்களூருவில் மட்டுமே தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது இந்த நிறுவனம்,
விரைவில் இந்தியா முழுவதும் சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இச்சேவை ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜியோவிற்கு மாற்றாக இன்டர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சேவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டிலேயே 1ஜிபி டேட்டாவை இரண்டு ரூபாய்க்கு இந்நிறுவனம் ஏற்கனவே அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.