கள்ளக்குறிச்சியில் அண்ணன்-தங்கை இடையே ஏற்பட்ட தகராறில், தந்தையே மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மயில் என்பவர் மீன்பிடி தொழிலை கேரளாவில் செய்து வருகின்றார். இவரின் முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிகுமார் என்ற மகன் இருக்கின்றார். சென்ற 25 வருடங்களுக்கு முன்பாக சந்திரா இறந்து விட்டதால் மயில் இரண்டாவதாக வசந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா உள்ளிட்ட இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் திவ்யாவுக்கு திருமணமாகி அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தனது தாய் வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்திருக்கின்றார். இதனிடையே சசிக்குமாருக்கும் திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நேரத்தில் கேரளாவிலிருந்து மயில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மீண்டும் அண்ணன்-தங்கை இடையே தகராறு ஏற்பட்டப்போது மயில் கண்டித்து இருக்கின்றார்.
பின் மீண்டும் அண்ணன்-தங்கை இடையே வாய் தகராறு ஏற்பட மயில் ஆத்திரமடைந்து சசிக்குமாரை கண்டித்து இருக்கின்றார். இதில் தந்தை-மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. இதில் மயில் வீட்டில் இருந்த கடப்பாரையால் சசிகுமாரின் கண்ணில் குத்தியதாக கூறப்படுகின்றது. இதில் சசிகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் வழக்கு பதிவு மயிலை கைது செய்தார்கள்.