Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இதுதான் ஆசிரியர்களின் தற்போதைய நிலை” கண்ணீர் மல்க ஆசிரியை வெளியிட்ட வீடியோ…. சமூக வலைதளங்களில் வைரல்….!!

அரசு பள்ளி ஆசிரியை கண்ணீர் மல்க அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்று, நான் எழுதுவதா இல்லை, பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, அம்மாவை கவனிப்பதா, சமையல் செய்வதா, நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

என்ன செய்வது என்று கூறி கண்ணீர் மல்க அழுதபடி செல்போனில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை ஆசிரியர்கள் பலர் பல்வேறு சமூக வலைதளக்குழுக்களிலும் பதிவிட்டு ‘இது தான் ஆசிரியர்களின் தற்போதைய நிலை’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |