விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாகவே இருக்கும். அஸ்திவாரம் போட்டு நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வது பற்றி சிந்தனை செய்வீர்கள்,தொழிலில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்று அறிவுத்திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
இன்று தனாதிபதி உங்களுக்கு செல்வத்தை கொடுப்பார். அரசு தொடர்பான பணிகள் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகளும் உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி வாய்ப்புகள் நடைபெறும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். மேற்காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகமாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
அதிர்ஷ்டமான திசை: மேற்கு