செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், யாரையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி இப்போது நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த துரோகிகளால் அவருக்கே ஆபத்து வரும், அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அண்ணா திமுகவை பொருத்தவரை, ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
எந்த இடத்திலும் எந்த ஊரிலும் , எந்த தொண்டர்களும் எந்த இடத்தில் கசப்பான ஒரு சம்பவமோ, தகராறு எதுவும் கிடையாது.தலைவர்கள் மத்தியில்தான் குழப்பமே ஒழிய, பதவி வெறிபிடித்த அலைகிறார்களே ஒழிய, தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அம்மா அவர்கள் சொன்ன அந்த ராணுவ கட்டுப்பாட்டோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.
அந்த ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒன்று கூடி முடிவெடுக்கின்ற பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடத்துபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அண்ணா திமுகவை எந்த சக்தியாலும், யாரும் அழிக்க முடியாது, அடக்க முடியாது. ஆயிரம் ஆண்டு காலம் வாழப் போவது போல் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வந்தால், தனக்கு ஓராண்டு ஆய்வு குறைந்து சாவு நெருங்குகிறது என்பதை மறந்துவிட்டு செயல்பட வேண்டாம்.இந்த கட்சியை அழித்த பெருமைக்கு நீங்கள் சொந்தக்காரராக வேண்டாம், உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி, உங்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்த கட்சி, உங்களுக்கு இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்து கொடுத்த கட்சி அண்ணா திமுக என தெரிவித்தார்.