விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும்.
அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி நிலை இருக்கும். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவீர்கள். கலைத் துறையை சார்ந்தவர்கள் இன்று பாடுபட்டு உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் கடின உழைப்பு வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
இன்று நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு மற்றும் உழவர்களினிடம் சுமுகமான உறவை நீட்டிக்க முடியும். உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடை விலகிச் செல்லும். பணவரவு இன்று நல்லபடியாக இருப்பதால் சேமிப்பதற்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள். இன்று யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். இன்றைய நாள் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவி இருவருக்குமிடையே அன்பு இருக்கும். மாணவ மாணவிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும், சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்திலும் வெற்றிக் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.