ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதல் பவுலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்கள் அதிகம் அடங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே நாட்டுக்கு ஒரு நாள் தொடரில் பங்கேற்க செல்வதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் வேக பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3 வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. ஏனென்றால் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தால் அணியில இடம் பிடிக்காத சூழ்நிலையில் 3 வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்..
அது மட்டும் இல்லாமல் அணியின் கூடுதல் ஸ்டாண்ட் பை வீரர்களாக ஸ்ரேயஸ் ஐயர் தீபக் சஹார் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர். அதே சமயம் ஆவேஷ் கான் தீபக் சஹாரை விட மிகவும் சிறந்த பந்துவீச்சாளரா? என்றும் தீபக் சஹாரை முதன்மை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்தது..
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரை முடித்துவிட்டு நேரடியாக கே.எல் ராகுல், தீபக் சஹார் மற்றும் தீபக் ஹூடா உள்ளிட்டோர் நேரடியாக அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று விட்டனர். இதையடுத்து துபாய் சென்றடைந்த பின் இந்திய அணியின் தீபக் சஹருக்கு காயம் ஏற்பட்ட தான் காரணமாக அவர் ஆசிய தொடரில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து பேச்சாளர் அணியில் சேரப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி விவாதத்தை கிளம்பி வந்தது..
இந்நிலையில் இதனை மறுத்துள்ள பிசிசிஐ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இது குறித்து நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது, தீபக் சாஹர் காயத்தால் விலகுகிறார் என்ற தகவல் பொய்யானது. அவர் துபாயில் இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. நேற்றைய பயிற்சி போட்டி மற்றும் இன்றைய பயிற்சி போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசி வருகின்றார்.. அவர் நல்ல உடல் தகுதியுடன் நலமாக தான் இருக்கிறார் என்று விளக்கம் அளித்தது.. அதே நேரத்தில் கூடுதல் பவுலராக குல்தீப் சென் அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் நிர்வாகம் தெரிவித்தது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய குல்தீப் சென் 145 கிலோ மீட்டர் வேகத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என்பதால் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது பி.சி.சி ஐ