Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு 1000 ரூபாய்… ஆப்பிள், ஆரஞ்சு-டன் ஒப்பிட்ட அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம்  முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள்.

21 லிருந்து 57 வயது வரைக்கும் அரசின் எந்த திட்டமும் போய் சேராதவர்களுக்கு நாங்கள் ஒரு பணம் கொடுக்கிறோம் என்று புதுச்சேரி அரசு சொல்லியுள்ளது. இது இரண்டுமே ஒரு ஆப்பிளையும்,  ஆரஞ்சையும் கம்பேர் பண்ற மாதிரி தான். நாளைக்கு திரும்ப தமிழ்நாட்டுல திமுக 2026 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீங்கள் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருங்கள், 10,000 ரூபாய் நாங்கள் அக்கவுண்டிற்கு போட்டிடுவோம் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

அது அரசினுடைய கடமை என்று சொல்வீர்களா? அரசின் உரிமை என்று சொல்வீர்களா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலவசம் என்று சொல்வீர்களா? என்னை பொறுத்தவரை அது இலவசம் என்று நான் சொல்லுவேன். நீங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள், எங்கேயும் செல்ல வேண்டாம் ஒன்றாம் தேதி எல்லா தமிழ் நாட்டு குடிமகனுக்கும் 10,000 ரூபாய் வங்கி கணக்குக்கு நான் அனுப்பி விடுவேன் என்று சொன்னால,  நான் அதை இலவசத்திற்குள் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

Categories

Tech |