Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி உள்ளே வரவே கூடாது..! இதெல்லாம் தேவையில்லாத வேலை… அதிரடி காட்டிய அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 70 ஆண்டுகள் கழித்து ஒரு கழிப்பிடம் கட்டி மோடி  கொடுக்கிறார் என்றால், அது மக்களுடைய உரிமையாக தான் பார்க்கிறோமே தவிர அந்த கழிப்பிடத்தை மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவசமாக பார்க்கவில்லை, ஏனென்றால் அது மக்களுடைய தேவைக்குள் இருக்கக்கூடிய விஷயங்கள்.

அதனால் இந்த நேரத்தில் மக்கள் மன்றத்தில் பலவிதமான கருத்துக்களை நாம் வைக்கின்றோம், கடைசியில் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போட்டு தான் ஜெயிக்க முடியும், மக்கள் தான் ஓட்டு போட்டு தீர்மானிக்கிறார்கள். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டேன், பாரதிய ஜனதாவின் கட்சியை நான் ஏற்றுக் கொண்டேன், இலவசத்தை பற்றி நீங்கள் சொன்னது ஏற்றுக் கொண்டேன் என்று…

அனைத்தையும் மக்கள் மன்றத்தில் வைப்போம். இன்றும் ஒரு ஆறு மாசம், ஒரு வருடத்தில் மக்களாகவே முடிவெடுக்க ஆரம்பிப்பார்கள்.ஏனென்றால்ஒரு ஒரு தேர்தலிலும்  இலவசத்திற்கு சவால் தான்.  அடுத்த தமிழ்நாடு தேர்தல் நடப்பதற்கு முன்னால்,  ராஜஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்து இருக்கும், தெலுங்கானாவில் நடந்து முடிந்திருக்கும், கர்நாடகாவில் நடந்து முடிந்திருக்கும். ஆக மக்கள் மன்றத்தில் மக்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்றும் நாம் பார்க்க வேண்டும்.

ஆகம விதி கடவுள் காலத்தில் இருந்து இப்படித்தான் 300 ஆண்டுகள் செய்கிறோம், அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம். ஆனால் ஏதாவது ஒரு கோவிலில் ஜாதி என்கின்ற அடிப்படையில் நீங்கள் வரக்கூடாது என்று நாம் உருவாக்கியிருந்தால், அங்கே அதை கொண்டு வர வேண்டும் என்பதுதான் நம்முடைய முடிவு. அதற்கென்று ஆணும் பெண்ணும் நாம கோயமுத்தூர் ஈஷாவில் ஆண்களை கொண்டு போய் செய்வோம் என்பது தேவையில்லாத வேலை என தெரிவித்தார்.

Categories

Tech |