மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்த கணவன்.
களக்காடு அருகே கீலஉப்பூரணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி இவரது மனைவி தேவகிருபா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு வெற்றி துரை என்ற மகனும் லதா ஜாஸ்பர் என்ற மகளும் இருந்துள்ளனர். முத்துக்குட்டி சமையல் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு 7 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய முத்துக்குட்டி மனைவியையும் குழந்தைகளையும் காண ஆவலோடு வந்த பொழுது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சியடைந்து உறவினர் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் தேடியுள்ளார். எங்கு தேடியும் மனைவியும் குழந்தைகளும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். முத்துக்குட்டி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.