செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிருக்கு இலவசமாக 1000 ரூபாய் கொடுப்பதில் நான் பாண்டிச்சேரியை சப்போர்ட் செய்யவில்லை, பாண்டிச்சேரியில் 61 வயதுக்கு மேல் கேட்டதற்கு நான் விளக்கம் சொன்னேன், நான் முதலில் 61 வயதுக்கு மேலே இருக்கிறது என்று சொன்னவுடனே அரசனுடைய கடமை, இரண்டாவது ஒரு விளக்கம் அளித்தார். இல்லை அது 18 வயதில் இருந்து 57 வயது வரைக்கும் எந்தவிதமான அரசு மானியங்களும், வாங்காதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று கூறினோம்.
இது சாதாரண மனிதருக்கு, குடிமகனுக்கு விவாதமாக பேசிக் கொண்டிருக்கிறோம், இலவசம் இருக்கக்கூடிய கட்சியை விரும்புகிறீர்களா ? எப்படிப்பட்ட ஆட்சியாளர்களை விரும்புகிறீர்கள் ? இதில் சண்டை போடுவதற்கு ஒன்றுமில்லை, நாங்கள் பத்து வருடமாக ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாம், அவர்கள் இலவசம் கொடுத்திருக்கலாம், அது பாய்ன்ட் கிடையாது.
பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியா வேற, இன்றைக்கு இருக்கின்ற இந்தியா வேற, 20 வருடத்திற்கு முன்னால் தமிழ்நாடு வருமானம் கூடுதலாக இருந்த மாநிலம், இன்றைக்கு இந்தியாவில் அதிக கடன் வாங்கின மாநிலம்.அதேபோல திமுக வந்து 1999 இல் இலவசமாக கொடுத்தார்கள் அதைப்பற்றி நான் விவாதமே செய்யவில்லை, அப்போது பணம் இருந்தது கூடுதலாக இருந்தது.
2000இல் திமுகவில் இலவச தேர்தல் அறிக்கை பற்றி பேசவில்லை, 2010 பற்றி பேசவில்லை நிலமை வேற காலங்கள் வேறு. இன்றைக்கு ஒரு ஒரு மாநிலங்களுமே கடன் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது, தமிழ்நாடு 6 லட்சம் கோடி.தயவு செய்து இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்னாடி உங்களுடைய ஸ்டாண்ட் என்ன ?
இன்றைக்கு தேதியில் பிரதமருடைய வாதம், ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒரு ஒரு தேர்தலிலும் இப்படித்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தால், யார் வந்து ஒரு ஒரு மாநிலத்தை காப்பாற்றுவார்கள் என்பதன் பிரதமருடைய முக்கியமான பாயிண்ட் என தெரிவித்தார்.