Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி எதை தட்டி கேட்டார் ? தூக்கி போட்டு புதைப்போம்…! சீமான் சரமாரி கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உண்மையிலேயே மண்ணின் மகன் எப்படி தாயின் மாரை அறுக்க பொறுத்துக் கொண்டு இருப்பான் என்று யோசிக்க வேண்டும். இது என் பூமிதாயின்  மாரை அறுக்கின்ற செயல், அதை தாங்க முடியாமல் தான் தடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்கிறோம். என் மக்களுக்கு உணர்த்துகிறோம். ஒருவேளை முடியவில்லை, இவர்கள் செய்ய மாட்டார்கள், முடியவில்லை என்றால் அதிகாரத்திற்கு வந்து தடுப்போம்.

பெரும் பெரும் குழிகளாக இருப்பதில் எவனவன் அள்ளி என் மணலை கடத்துகிறார்களோ, அவர்களை தூக்கி போட்டு புதைப்போம். அதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. அந்த அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை கவனம் செய்ய வேண்டும், இன்னொரு தலைமுறை பல தலைமுறை தாண்டி வாழ்வதற்கு வாய்ப்பான பூமியை இதை வைத்து விட்டு போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது அதற்காக தான் இந்த போராட்டம்.

கனிமொழி எதை தட்டி கேட்டுள்ளார்கள், நாங்கள் வந்தால் நீட்டை ரத்து செய்து விடுவோம், அதற்கு எங்களிடம் திட்டம் இருக்கிறது, எங்களுக்கெல்லாம் வேறு யோசனை இருக்கிறது என்று கனிமொழியும் பேசினார்கள், திரு ஸ்டாலின் அவர்களும் பேசினார்கள், உதயநிதியும் பேசினார்கள். அப்பறம்  இன்னும் ஏன் நீட் இருக்கிறது. எந்த தீர்மானத்தை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளது ?

நீட்டிற்கு இவர்கள்தான் தீர்மானம் போட்டார்களா ? எடப்பாடி பழனிச்சாமி கூட போட்டார்கள் ஏற்றார்களா? உங்களால் சண்டை போட துணிவு இருக்கா? ஆனா நான் போடுவேன்.நீங்கள் போட்டு அனுப்புற சட்டத்தை நாங்கள் ஏற்க வேண்டுமா? எட்டு கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தை பெற்ற அரசு நான் போட்ட சட்டத்தை நீ மதிக்கவில்லை என்றால், உங்கள் சட்டத்தை நான் ஏன் மதிக்க வேண்டும் என்று கேட்பதற்கு துணிவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |