Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு போயிட்டோம்….. கோழிகளுக்கு பிரேத பரிசோதனை பண்ணுங்க…. எதற்காக தெரியுமா….????

பொதுவாக மனிதர்கள் இயற்கைக்கு முரணாக இறக்கும்போது தான் பிரேத பரிசோதனை செய்வார்கள். ஆனால் இங்கு கோழிக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரெட்ரோத்துவாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

தங்களது வீட்டில் பத்து கோழிகள் இருந்ததாகவும், தாங்கள் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தபோது, அரிசியில் விஷம் வைத்து கோழிகளை யாரோ கொன்றுவிட்டார்கள் என்றும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த கோழிகளின் உடலை கூராய்வு செய்ய நடவடிக்கை எடுத்தனர். உடற்கூராய்வு அறிக்கையின்படி விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |