தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (26-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம்:
கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாலை சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி,
கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் மாவட்டம் தேனூர், கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர்,
கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது, என தெரிவித்துள்ளார்.