Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்…எதிலும் வெற்றி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். திருமணப் பேச்சுகள் கைகூடும். அதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் கொஞ்சம் அதிகரிக்கும். இன்று மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி இருக்கும், எந்த ஒரு சின்ன விஷயமும் கூட லாபமாக தான் உங்களுக்கு நடந்து முடியும்.

முக்கிய நபர்களினால் உங்களுக்கு அறிமுகமும் அதனால் உங்களுக்கு கௌரவமும்  ஏற்படும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

கல்வியில் அவர்கள் ரொம்ப சிறப்பாகவே செயல்படுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேறு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிஷ்ட நிறம்:  நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |