தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில் காலாண்டு தேர்வு எப்படி எதிர்கொள்வது என மாணவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.தமிழகத்தில் 2300-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளிகள்இருக்கின்றன. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் காலாண்டு தேர்வுக்கு பின் இந்த இடங்கள் BC, MBC, SC/STபிரிவினர்களைக் கொண்டு நிரப்பப்படும் எனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.