உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்க்கு 5ஜி தொழில்நுட்பம் தான் ஒரு சான்று .இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.மேலும் மலிவு விலையில் 5 ஜி சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 5g சேவை முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.