தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்து வருகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் மட்டுமே 50 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி திருச்சி, சமயபுரம், திருப்பராய்த்துறை, கரூர், வனவாசி,தஞ்சை வாழவந்தான் கோட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. கார், வேன், ஜீப் உள்ளிட்டவற்றுக்கு ஐந்து ரூபாய் வரையும், ட்ரக் மற்றும் பஸ் என அச்சுக்கள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்கிறது.தமிழக முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கலந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.