இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் எப்போதுமே மகேந்திர சிங் தோனி தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ்ரெய்னா செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியில் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மகேந்திர சிங் தோனி. அதே போல்,
எங்களிடமும் அதே தன்னம்பிக்கையை கொண்டு வந்தவர். தற்போது அணியில் அவர் இல்லாத பட்சத்திலும், அவருடைய வழிகாட்டுதலின் படி இந்திய அணி தற்போது வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் பல வெற்றிகள் அடைய முடிகிறது என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் அவருக்கு மாற்று வேறு யாருமில்லை என்று அவர் தெரிவித்தார். சுரேஷ் ரெய்னாவின் இந்த பதில் தோனி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.