Categories
தேசிய செய்திகள்

5ஜி டவர் அமைக்க அனுமதி தேவையில்லை….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.மேலும் மலிவு விலையில் 5 ஜி சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 5g சேவை முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 5g சேவையை தொடங்குவதற்காக ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் அதிவேக பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பயிற்சி சேவைக்கான டவர்கள் மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிகளுக்கு உரிமம் வாங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தனியார் இடங்களில் டவர் அமைக்கவோ கேபிள் பதிக்கவும் எந்த உரிமம் வாங்க தேவையில்லை எனவும் முன்கூட்டியே தகவல் மட்டும் அளித்தால் போதும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |