இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது.
அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து பார்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது மொபைல் போனை ஹேக் செய்திருந்த நபர், தொடர்ச்சியாக அவரது வங்கி கணக்கில் இருந்து பல முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். தொடக்கத்தில் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.80 ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.21 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இணையதள குற்ற பிரிவு போலீசாருக்கு வரலட்சுமி புகார் அளித்து உள்ளார்.