சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே தொடர்ந்து ஜாதி ரீதியில் பேசி வந்த பேராசிரியை அனுராதா பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பேசும்போது பட்டியல் வகுப்பு மாணவர்களை தரக்குறைவாக பேசியும் மாணவர்களின் ஜாதி என்ன என்று கேள்வி எழுப்பியும் இவர் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுராதா ஏற்கெனவே ஒரு முறை சாதிய ரீதியில் பேசியதால்தான் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை பெற்றால் அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே தனது பணியை தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.