சிம்மம் ராசி அன்பர்களே, இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி தரும் வழியில் இருக்கும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும், திருமண முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு இருக்கும். நெடுநாளைய சங்கடங்கள் தீரும். பயணங்கள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றம் பாதையில் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்