Categories
தேசிய செய்திகள்

உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்…. இளைஞர் அசத்தல்….. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க…..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் என்ற பகுதியை சேர்ந்த பி டெக் பட்டதாரியான ரோகித் சர்மா என்ற இளைஞர், உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,13 அடி நீளம் கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதேசமயம் 700 கிலோ எடை இழுக்கும் திறன் கொண்டது.

இதற்கு இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 1080 கிலோ மீட்டர் வரை செல்லலாம். இதற்கு மஹாபல் எலக்ட்ரிக் சாஃபர் இன்று பெயரிடப்பட்டுள்ளது. என்னுடைய கல்வி உதவித்தொகை மற்றும் பாக்கெட் மணியை வைத்து இந்த பைக்கை உருவாக்கினேன். இதை உருவாக்க மொத்தமாக 50 நாட்கள் தேவைப்பட்டது.இதற்கு 1.2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளேன் என அந்த நபர் கூறியுள்ளார்.

Categories

Tech |