Categories
உலக செய்திகள்

“இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு”…. பிரபல நாட்டு அதிபர் மாளிகை தகவல்….!!!!!

உக்ரைன் பிரச்னையில் தங்களது தேசநலனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளைமாளிகை தெரிவித்தது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடா்பு அதிகாரி கரின் ஜீன்-பியா் செய்தியாளா் சந்திப்பின்போது “அமெரிக்கா, இந்தியாவைத் தவிா்க்க இயலாத நட்பு நாடாகவே கருதுகிறது. அமெரிக்கா மற்றும் இந்திய பாதுகாப்பு உறவு என்பது தடைகளற்ற வெளிப்படையான இந்தோபசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுவதை அடிப்படையாக கொண்டது.

உக்ரைனைப் பொறுத்தவவரை நிதி உதவி, தளவாட உதவியை அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் நேட்டோவை விரிவாக்கி பலப்படுத்துவதை அமெரிக்கா ஆதரித்து இருக்கிறது. உக்ரைன் பிரச்னையில் தங்களது தேசநலனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா செயல்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடாக உள்ளது. இந்த நட்புறவில் அமெரிக்காவானது உறுதியாக இருக்கிறது. அதாவது அமைதியை நிலைநாட்டுவது, நாட்டு மக்களின் வளமான வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்காக இரு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் அடிப்படையிலும், உலகம் முழுவதும் நாம் சந்திக்கின்ற சாவல்களை எதிா்க்கொள்ளும் வகையிலும் இந்த நிலைப்பாடு எதிா்காலத்தில் தொடரும் என அவா் கூறினாா்.

Categories

Tech |