உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் தொழில் அதிபர் அமான் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 12 வயது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தந்தை முதல் தகவல் அறிக்கை நகலையும் பெண்ணின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே துறை உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதற்கு தமிழக காவல்துறை ட்விட்டரில், சிறுமியை மீட்பது குறித்து கோயம்பத்தூர் காவல் ஆணையருக்கும் அனைத்து ரயில் நிலைய காவலர்களுக்கும் அலெர்ட் செய்திருப்பதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட மகள் கோவையில் உள்ளதாகவும் இருவரும் ரயில் நிலையம் வருவார்கள் என்று தகவல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து டிஜிபி உத்தரவின் படி கோவை மாநகர காவல் ஆணைய பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சிறுமியையும் கடத்தல்காரரையும் தேடி வருகின்றனர். அதனைப் போல கோவையில் இருந்து வட மாநிலம் செல்லும் ரயில்களும், வடமாநிலத்தில் இருந்து கோவை வரும் ரயில்களும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்கட்ட தகவலின் படி, லக்னோ போலீஸ்காரரின் 14 வயது மகன் அந்த 12 வயது சிறுமி கடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவனின் தந்தையான போலீசாரிடம் லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குகிடையில் லக்னோவில் சம்பவத்தன்று பதிவான சிறுமி மற்றும் அந்த சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.