Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் படம் பார்த்து Review தர வேண்டும்…. தமிழக அரசு உத்தரவு…!!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறார் திரைப்படங்களை திரையிடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திரைப்படத்துக்கென ஒரு பாடவேளையை ஒதுக்க வேண்டும் என்றும், திரையிடலுக்கு முன்பு பின்பும் ஆசிரியர்கள் அப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாட வேண்டும், திரையிடப்படும் படம் குறித்து மாணவர்கள் கட்டாயமாக விமர்சனம் எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |